ETV Bharat / state

திருப்பத்தூரில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. ஐந்து இளைஞர்கள் கைது - பின்னணி என்ன? - Tirupathur Kerosene Bomb Attack - TIRUPATHUR KEROSENE BOMB ATTACK

Tirupathur Kerosene Bomb Attack: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கார் ஓட்டுநரின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை மட்டும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tirupathur Kerosene Bomb Attack
Tirupathur Kerosene Bomb Attack
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:01 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன். 42 வயதான இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், மண்ணெண்ணெய் திரி கொண்ட குண்டை சரவணன் வீட்டின் போர்டிகோ, கழிவறை, படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர், போலீசார் விசாரணையில், சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை, அதிபெரமனூரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அஷ்வின் (21) என்பவர் காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், அஷ்வின் காதலிப்பதை அவரது தந்தை கதிர்வேலிடம், கார் ஓட்டுநர் சரவணன் கூறியதாகவும், இதன் காரணமாக ஆத்திரமடைந்த அஷ்வின், தனது நண்பர்களான அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் மற்றும் சக்திவேல் உள்ளிட்ட நபர்களுடன் சேர்ந்து கார் ஓட்டுநர் சரவணன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக போலீசார், அஷ்வின் மற்றும் அவரது நண்பர்களான அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் உள்ளிட்ட ஐந்து இளைஞர்களையும் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஆத்தூர் குப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவரை தற்போது போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் பெண் ரயில் மேலாளரை தாக்கி பணம் பறித்த சிறுவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.