ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. நிவாரணத் தொகையை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை! - Fishing ban period

Fishing: மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆர்வமுடன் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

Boa
படகு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 7:04 AM IST

Updated : Jun 15, 2024, 12:47 PM IST

தூத்துக்குடி: மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் ஆழ்கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் நீங்கியது. இந்த நிலையில், இன்று (ஜூன் 15) அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர் சங்க நிர்வாகி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. இவ்வாறு தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 60 நாட்களுக்கு பின்பு கடலுக்குச் செல்வதால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்கு ஆர்வமாக சென்றனர்.

இவ்வாறு 60 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள், இன்று நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம் எனவும், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், சென்னை, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றனர். மேலும், இது தொடர்பாக மீனவர் சங்க நிர்வாகி முருகன் கூறுகையில், “தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர். ஒரு சிலர் ஒரு வாரத்திற்கும், சில படகுகள் ஓரே நாளில் திரும்பி வர திட்டமிட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் வரத்து அதிகமாகவே இருக்கும்.

மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்த நிலையில், மீன்வரத்து மேலும் அதிகரித்து மீன்களின் விலை படிப்படியாகக் குறையும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். நிவாரணத் தொகை மீனவர்களுக்கு வழங்குவது போல், படகு உரிமையாளர்களுக்கும் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீன்பிடி தடைக்காலத்தில் இன்ஜின் படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Jun 15, 2024, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.