ETV Bharat / state

கடற்கரை மணலில் சிக்கிய டூரிஸ்ட் பஸ்ஸை 20 மணிநேரம் போராடி மீட்ட திருச்செந்தூர் மீனவர்கள்! - bus stuck in Tiruchendur beach sand - BUS STUCK IN TIRUCHENDUR BEACH SAND

bus stuck in Tiruchendur beach sand: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த சுற்றுலா பேருந்து கடற்கரை மணலில் சிக்கிய நிலையில், 20 மணி நேரத்திற்கு பிறகு மீனவர்களின் உதவியோடு கடலில் இருந்து படகை இழுக்கும் டிராக்டர் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.

கடற்கரை மணலில் சிக்கிய பஸ்
கடற்கரை மணலில் சிக்கிய பஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 11:26 AM IST

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பாண்டி என்ற ஓட்டுநர் தனது சுற்றுலா பேருந்தில் சிவகாசியைச் சேர்ந்த 60 பக்தர்களை அழைத்துக் கொண்டு நேற்று இரவு 8 மணி அளவில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் திருச்செந்தூர் அய்யா கோயில் அருகே கடற்கரை மணலில் பேருந்து சிக்கி உள்ளது. உடன் வந்த பக்தர்கள் அனைவரும், மணலில் சிக்கிய பேருந்தை நீண்ட நேரம் போராடி மீட்க முயன்றனர் ஆனாலும் மீட்க முடியவில்லை.

இதனால் பக்தர்கள் அனைவரும் கோயிலில் இரவு தங்கி, அதிகாலை தரிசனத்தை முடித்து விட்டு, பின் பேருந்தை வெளியே எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து சென்று விட்டனர். அதன்படி காலையில் தரிசனத்தை முடித்து வந்த பக்தர்கள், மீண்டும் பேருந்தை வெளியே எடுக்க முயன்றும், முடியாததால் திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை சந்தித்து மீனவர்கள் கடலில் இருந்து படகை இழுக்கும் டிராக்டர் மூலம் பேருந்தை வெளியே எடுக்க உதவி கேட்டனர்.

ஆனால் கடலில் இருந்து வரும் படகுகள் அனைத்தையும் மதியத்திற்கு மேல் தான் வெளியே கொண்டு வருவோம் என்று கூறிய மீனவர்கள், மதியம் இரண்டு மணியளவில், கடற்கரை பகுதியில் சிக்கி இருந்த பேருந்தை, தங்களின் டிராக்டர் மூலம் போராடி வெளியே எடுத்தனர். மாலை 3.30 மணி அளவில் பேருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர், பக்தர்கள் அனைவரும் அந்த பேருந்தில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

திருச்செந்தூர் கோயிலில் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிற்க போதுமான இடம் இல்லை என்பதால் அய்யா கோயில் பகுதியில் நிறுத்தப்படுகிறது. எனவே விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் இதுபோல் பெரிய வாகனங்கள் மற்றும் பேருந்துகளை வெளியே உள்ள தெப்பக்குளம் பகுதியில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join ETV Bharat WhatsApp channel Click here
Join ETV Bharat WhatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ராஜபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! - ELEPHANT DIED in Srivilliputhur

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.