சென்னை: பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் முதல் முறையாக வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் கோச் (Vande Bharat Sleeper Coach) பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 823 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம் என்ன? இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயிலில் முதல் ரக ஏசி பெட்டி ஒன்று உள்ளது. இதில் 24 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் இரண்டாம் ரக ஏசி பெட்டிகள் 4 உள்ளது. இதில் 188 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் மூன்றாம் ரக ஏசி பெட்டிகள் 11 உள்ளது. இதில் 611 பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் தீ அணைப்பான் கருவி மற்றும் ஒவ்வொரு படுக்கைக்கு அருகே அவசர காலங்களில் ரயில்களை நிறுத்தும் பட்டன. ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லவதற்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது.
கூடுதல் சிறப்பம்சமாக Emergency Talk Back Unit என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில், மற்றும் உதவி தேவைப்படும் நேரங்களில் லோகோ பைலட் இடம் பேச முடியும். அதே போல் பயணிகளின் பாதுக்காப்பை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு பெட்டிகளிலும் சிசிவிடி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இதனை லோகோ பைலட் அறையில் உள்ள ஒருவர் கண்காணித்துக் கொண்டு இருப்பார்
மேலும் லோகோ பைலட் அறையில் ரயில்களில் உள்ள சிசிவிடி காட்சிகள் ஓடி கொண்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டிகளிலும் சிசிவிடி கேமிராக்கள், கழிவறை வசதிகள், ஒவ்வொரு படுக்கைக்கு அருகே மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜிங் செய்து கொள்வதற்கான வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரப்போகுது முதல் ஹைட்ரஜன் ரயில்; பெட்டிகளைத் தயாரிக்கும் சென்னை ஐசிஎஃப்: ஜெர்மனி, சீனாவுக்கு அடுத்து இந்தியா!
ரயில் தயாரிப்பில் அசத்தும் ஐசிஎப்: இந்தியா முழுவதும் மொத்தமாக பஞ்சாப், உத்தரபிரேதசம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் சென்னையில் செயல்பட்டு வரும் ஐசிஎப் தொழிற்சாலையில் மட்டும் 77 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது?: இந்த நிலையில் தான் நாட்டிலேயே முதன் முறையாக சகல வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் பெட்டிகளை செய்து அசத்தியுள்ளது ஐசிஎப். இது குறித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலையின் பொது மேலாளர் உ.சுப்பா ராவ் ஈடிவி பாரத்திடம் கூறுகையில்,"பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்தில் நீண்ட தூரம் பயணிக்கக்கூடியவர்களுக்காக இந்த ஸ்லீப்பர் கோச் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டப் சோதனை ஓட்டம் நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு முடிவடையும், அதன் பிறகு மத்திய ரயில்வேயின் சார்பில் சோதனை நடத்தப்படும். அடுத்த வருடம்(2025) ஜனவரி 15 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில்கள் அனுமதி பெறும்" என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு அம்சங்கள் என்ன?: தொடர்ந்து பேசிய அவர், மேலும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச், ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பட்டிற்கு வரும் எனவும் ரயில் பெட்டிகள் ஒன்றன் பின் ஒன்றோடு மோதினால் பெரும் விபத்து தவிர்க்கும் விதத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும், 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 50 ரயில் ரேக்குகள் ஐசிஎப் தொழிற்சாலையில் தயார் செய்யப்பட உள்ளன. அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் இருப்பது போல கவாச் சிஸ்டம் இதிலும் உள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் 120 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டு, லக்னோவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வடிவமைப்பை உருவாக்க 1 வருடம் தேவைப்பட்டது" என்றார்.