தென்காசி: திருவேங்கடம் அருகே உள்ள, மைப்பாறை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடித்ததில், ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகே உள்ள கட்டிடங்கள் இடிந்து சேதமாகி உள்ளது.
இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்தவர்கள் இடுபாடுகளில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் தீயணைப்புத் துணையினர், மீட்புப் பணிகளுக்கு உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சங்கரன்கோவில் காவல் கண்காணிப்பாளர் சுதீர் தலைமையில், ஏராளமான காவல்துறையினர் அந்த பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இதையும் படிங்க: பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - Palani Railway Station Bomb Threat