ETV Bharat / state

சாலை விபத்தில் உயிரிழந்த ஆம்பூர் பெண் காவலர் பரிமளா.. நிதியுதவி வழங்கிய சக பெண் காவலர்கள்! - Ambur police Financial assistance

Financial assistance to Woman Police: ஆம்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு, சக பெண் காவலர்கள் நிதியுதவி வழங்கி, அவரது நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

நிதியுதவி வழங்கிய சக பெண் காவலர்கள் புகைப்படம்
நிதியுதவி வழங்கிய சக பெண் காவலர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 9:27 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர், பரிமளா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், பரிமளா கடந்த 2003ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து, சுமார் 21 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

மேலும் பரிமளா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்த போது, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பணி முடித்துவிட்டு, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக இவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், பெண் தலைமைக் காவலர் பரிமளாவுடன் 2003ஆம் ஆண்டு ஒன்றாக காவலர் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள், 'தோழி' என்ற வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒன்றிணைந்து, "நமக்குள் ஒன்றிணைவோம்.. நமக்காய் ஒன்றிணைவோம்" என்ற நோக்கத்தில், பரிமளாவின் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளனர்.

அதாவது, பரிமளாவின் பெண் மற்றும் ஆண் குழந்தையின் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கேவிபி (KVP - Kisan Vikas Patra scheme) அஞ்சலக வைப்புத்தொகை பத்திரங்கள் மற்றும் அசல் ரசீதுகள் மற்றும் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் ரொக்கத்தையும் பெண் காவலர் பரிமளாவின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து பெண் காவலர் பரிமளாவின் திருவுருப்படத்திற்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி, அவருடன் பணியாற்றிய நிகழ்வுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாஞ்சோலை விவகாரம்; விருப்பமில்லாமல் விஆர்எஸ்-ல் கையெழுத்து போட்டோம்.. தொழிலாளர்கள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.