ETV Bharat / state

சவுக்கு சங்கர் விவகாரம்: திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெராலிடம் போலீசார் விசாரணை! - Youtuber Felix Gerald

Felix Gerald in savukku sankar issue: சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெராலிடம் திருச்சி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு
திருச்சி சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு (CREDIT - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 5:08 PM IST

Updated : May 13, 2024, 10:36 PM IST

திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கரை கைது செய்த கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கஞ்சா, லேப்டாப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் இன்று (மே 12) காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்தனர்.

திருச்சியில் ஆஜர்: இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்து காவல்துறை வாகனம் மூலம் உரிய பாதுகாப்புடன் விசாரணைக்காகத் திருச்சி மாவட்டம் அழைத்துச் செல்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி அழைத்து வரப்பட்டு அங்குள்ள மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து பெலிக்ஸ் ஜெராலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெரால்சை மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? - IIT MADRAS

Last Updated : May 13, 2024, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.