ETV Bharat / state

2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை.. மதுரையில் பரபரப்பு! - 2 children murder - 2 CHILDREN MURDER

மதுரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நபரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார்
தற்கொலைக்கு முயன்ற நபரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 1:22 PM IST

மதுரை: மதுரை அண்ணா நகர் அருகே உள்ள யாகப்பாநகரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்ஷனா (7) மற்றும் ரக்ஷிதா (5) என்ற இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சேதுபதி, இன்று காலை கூர்மையான ஆயுதத்தால் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர், குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்ற சேதுபதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் - ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது சேதுபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து அவருடைய மனைவி ராஜேஸ்வரியிடம் அண்ணா நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்னையா? அல்லது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரணமாக நடந்த கொலைகளா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.