ETV Bharat / state

பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. காரணம் என்ன? - Farmers protest in thanjavur

Farmers protest: தஞ்சையில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்கள் கேன்சல் செய்ததாகக் கூறி, கன்னியாகுமரி பனாரஸ் விரைவு ரயிலை எடுக்க விடாமல் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான புகைப்படம்
விவசாயிகள் போராட்டம் தொடர்பான புகைப்படம் (credits to ETV Bharat tamil)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 3:03 PM IST

விவசாயி அய்யாக்கண்ணு பேட்டி (Credits to ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 4ஆம் கட்ட தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதிக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தற்போது வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக வாரணாசிக்குச் சென்று அங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று (மே 10) காசி தமிழ் சங்கமம் (கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை) விரைவு ரயிலில் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்து புறப்பட்டனர்.

அப்போது, அந்த ரயிலில் சிலருக்கு கன்பார்ம் டிக்கெட்டும், காத்திருப்புப் பட்டியலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில் காலை தஞ்சைக்கு வந்தபோது, இருக்கை வசதிகள் இல்லை, தண்ணீர் வரவில்லை எனக் கூறி ரயில் பெட்டியின் செயினை இழுத்து ரயிலை நிறுத்திய விவசாயிகள், ரயிலை எடுக்கவிடாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ரயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், அதே ரயிலில் மீண்டும் பயணம் செய்தனர். இதனால் ரயிலில் பயணித்த இதர பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.