ETV Bharat / state

திருச்சியில் ரூ.10க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்: விவசாயிகள் வேதனை..! - 10ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம்

Onion rate deplement in Trichy: திருச்சி வெங்காய மண்டியில் 10 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தால் விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் ரூபாய் 10க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 9:03 PM IST

திருச்சி: காய்கறிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி ஆகிய இரண்டும் பல மாதங்களில் அதன் விலை வானுயரம் அதிகரித்து மிரளவைக்கும், அப்படி இல்லையெனில் தரைமட்டத்தில் இருக்கும். அந்த வகையில் திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூபாய் 200 வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ 10 ரூபாயாகக் குறைந்துள்ளது.

காலை உணவில் தொடங்கி சாம்பார், பிரியாணி, குழம்பு வகைகள் என தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் இருந்து வருகிறது. வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து உடலில் எளிதாகக் கலக்கும் தன்மை கொண்டது. எனவே அடித்தட்டு மக்கள் வரை வெங்காயம் என்பது அத்தியாவசியமான பொருளாக உள்ளது.

சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி (பெரிய வெங்காயம்) மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைப் பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் செய்யப்படுகிறது. திருச்சி பால்பண்ணை மொத்த வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. மேலும் கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

வழக்கமாக 200 முதல் 300டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயங்கள் விற்பனைக்காக விவசாயிகளிடமிருந்துப் பெறப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று(ஜன.27) 500 டன் தலா சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயங்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று(ஜன.27) ஏனோ வெங்காயங்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது வியாபாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, வெங்காயங்களின் விலை அடிமட்ட அளவிற்குக் குறைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், தற்போது 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை கடுமையாகக் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டிற்கு வெங்காயம் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தற்போது இதே நிலைமை நீடித்தால் வெங்காயம் விளைச்சல் செய்யும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விளைச்சலைக் குறைப்பார்கள் என்றும், வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். என்னதான் சின்ன வெங்காயம் விலை குறைவு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளைக் கவலையடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: 200 ஆடுகள், 300 கோழிகள் சமைத்து 5000 பேருக்கு பிரியாணி பிரசாதம்! மதுரை முனியாண்டி கோயில் திருவிழா..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.