ETV Bharat / state

கோவை டிலைட் தியேட்டர் இடிப்பு? நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை! - கோவை டிலைட் தியேட்டர்

Coimbatore Delite Theater: தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் என்ற பெருமையைப் பெற்ற டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருவது திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

delite theater demolished
delite theater demolished
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 6:49 PM IST

Updated : Feb 10, 2024, 6:38 AM IST

தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள 'டிலைட் திரையரங்கம்', 1914ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது. இந்தியாவில் சினிமா பிரபலமடைந்த காலகட்டத்தில், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் இதுவாகும். முதலில் வெரைட்டி ஹாலாக பெயரிடப்பட்டிருந்து, பின்னர் டிலைட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதில் இந்தியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் என்பதால், புகழ்பெற்ற இயக்குநர்களின் அனைத்து திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. மேலும் நடிகர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்டவர்களில் தொடங்கி, தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன.

1914ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திரையரங்கம், மூன்று தலைமுறையினர் கடந்து, கோவையின் முக்கியமான அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக திரையரங்குகள் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த தரை டிக்கெட் முதல், பின்னர் வந்த பால்கனிகள் வரை, இங்கு குறைந்த விலைக்கே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், திரையரங்கம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அந்தந்த காலத்திற்கேற்ப திரையரங்கில் பெரும்பான்மையான வசதிகள் செய்யப்படவில்லை. இருப்பினும், பழைய படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன.

கருப்பு வெள்ளை திரைப்படங்களில் துவங்கி, வண்ணப்படங்கள் என அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில், நவீனத் தொழில்நுட்பங்களுடன் புதிய திரையரங்குகள் வரத் தொடங்கியதால், டிலைட் திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர். இதனால் போதிய வருவாய் இல்லாமல், இதனை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் வணிக கட்டிடம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரையரங்கில் படம் பார்த்த அனுபவங்களை ஜீவானந்தம் என்ற ரசிகர் கூறுகையில், “டிலைட் என்று பெயர் மாற்றம் செய்துள்ள வெரைட்டி ஹால் திரையரங்கம் இடிக்கப்பட்டு, வியாபாரத் தளமாக மாறினாலும் இதன் நினைவுகளை யாராலும் அழிக்க முடியாது.

1980 முதல் 90 வரை புதியதாக திரைப்படம் வரும்போது இந்த சாலை முழுவதும் திருவிழாக்கோலம் போன்று காட்சியளிக்கும். இதன் காரணமாகத்தான் இந்த திரையரங்கத்தின் பெயரையே இந்த சாலைக்கு (வெரைட்டி ஹால் சாலை) வைத்துவிட்டனர்.இந்த ’டிலைட் திரையரங்கத்தின்’ ஒரு சிறு பகுதியையாவது அரசாங்கமோ அல்லது திரைப்படத்துறையோ எடுத்து, ஒரு நினைவுச் சின்னம் அமைத்து, இதன் புகழை இன்னும் நூறாண்டுகள் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதைப் போல், கோவையின் முக்கிய அடையாளமாக விளங்கி வந்த தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிக்கப்படுவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை போன்று இருந்தால்.. சந்தோஷ் நாராயணன் கூறியது என்ன?

Last Updated : Feb 10, 2024, 6:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.