ETV Bharat / state

போதை மாத்திரை விற்பனை செய்றியா?.. மருந்துக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த போலி போலீஸ்! - extortion in Chennai

Extortion in Chennai: சென்னையில் போலீஸ் எனக்கூறி மருந்துக்கடை உரிமையாளரை மிரட்டி 67 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தவர்கள் மீது அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:29 PM IST

சென்னை: சென்னை அயனாவரம் பி.இ கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன், அதே பகுதியில் மெடிக்கல் கடை ஒன்றை 17 வருடங்களாக நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு வந்த ஒருவர், எனது தாயாருக்கு இருமல் உள்ளது எனக்கூறி இருமல் மருந்து கேட்டுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், தான் போலீஸ் என்றும், பில் இல்லாமல் போதை மருந்தை விற்பனை செய்கிறாயா எனக் கூறியும் கடை உரிமையாளர் பிரபாகரனை மிரட்டியுள்ளார்.

போதை மருந்து விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, பிரபாகரனை போலி போலீஸ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பிரபாகரனை மிரட்டி 80 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பிரபாகரன் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

அப்போது பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என போலி போலீஸ் பிரபாகரனை மிரட்டியதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு அஞ்சிய பிரபாகரன், வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் தனது நண்பரிடம் கடனாக 60 ஆயிரம் ரூபாயை வாங்கி, போலி போலீசிடம் கொடுத்துள்ளார். முன்னதாக, மருந்துக் கடையில் இருந்து வந்த போது கடையின் கல்லாப் பெட்டியில் இருந்து 7 ஆயிரம் ரூபாயை போலி போலீஸ் எடுத்துள்ளார்.

இதன் பிறகு பிரபாகரனை மிரட்டி யாரிடமும் சொல்லக்கூடாது எனக்கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, பிரபாகரன் இந்தச் சம்பவம் குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் பேசியபடி கார் ஓட்டிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது! - TTF Vasan Arrest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.