ETV Bharat / state

தங்கப் புதையல் கிடைத்ததாக கைவரிசை! போலி நகைகளை விற்ற மோசடி கும்பல் கைது.. சிக்கியது எப்படி? - gold scams

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:18 AM IST

தங்க புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை விற்று ஏமாற்றி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்
கைது செய்யப்பட்டுள்ள பெண் (Credits - ETV Bharat)

சென்னை: சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ருக்மணி. இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த கடைக்கு சென்ற கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்த இருவர் சில பொருள்களை வாங்கிவிட்டு, ருக்மணியிடம் பேச ஆரம்பித்துள்ளனர்.

அப்போது தங்களுக்குத் தங்க புதையல் கிடைத்து இருப்பதாகவும், இதனைக் குறைந்த விலைக்கு விற்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய ருக்மணியிடம் அசல் தங்கநகைகள் சிலவற்றைக் கொடுத்து, உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த நகைகளைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுக் கொண்ட ருக்மணி, அப்பகுதியில் உள்ள நகைக் கடையில் கொண்டு சென்று பரிசோதித்த போது அது தங்க நகைதான் என தெரியவந்துள்ளது. இதையடுத்து ருக்மணி மாண்டியா கும்பலிடம், "இந்த நகையை நான் பெற்றுக் கொள்கிறேன் எவ்வளவு விலைக்கு இதைக் கொடுக்கிறீர்கள்" என கேட்டு உள்ளார்.

இதே போல் எங்களிடம் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன, ஆனால் குடும்ப கஷ்டத்தில் இருப்பதால் அதனை 6.5 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ருக்மணியிடம் 6.5 லட்சத்தை பெற்றுக் கொண்ட மாண்டியா கும்பல், மொத்த நகைகளைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் அவற்றை சோதனை செய்த பார்த்த போது அவை போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மணி இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் செல்போன்கள் என்னை வைத்து ஆப்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த கும்பல் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெண் ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த கீதா (வயது 47) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து கீதாவிடம் இருந்து அந்த கும்பல் பயன்படுத்தி வந்த செல்போன்கள், போலி நகைகள், 5.5 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ருக்மணியை ஏமாற்றிய ரோகித் மற்றும் கித்தா என்கிற ஆகாஷ் இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், "சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இந்த கும்பல், தங்களுக்கு புதையல் கிடைத்து இருப்பதாகவும், அதில் இருக்கும் பாரம்பரிய தங்க நகைகள் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: போட் புரமோஷனுக்கு லேட்டா வந்த யோகி பாபு- சொன்ன காரணத்தால் வந்தது சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.