சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் சுப்ரீம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த இரு தொழிலாளர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து…
— K.Annamalai (@annamalai_k) July 9, 2024
இதனிடையே, காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவகாசியில் தூய்மைப் பணியாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!