ETV Bharat / state

பதிவுச் சட்டம்; பதிவாளரின் அதிகாரம் ரத்தால் சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு - வல்லுநர்கள் சொல்வது என்ன? - registrar power to cancel deeds

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 3:49 PM IST

registrar lack power to cancel fake deed: போலி பத்திரங்களை ரத்து செய்யும் மாவட்ட பதிவாளரின் அதிகாரத்தை நீதிமன்றம் ரத்து செய்ததால் சிறிய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என ரியல் எஸ்டேட் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கறிஞர் முரளி மற்றும் சிவகுருநாதன்
வழக்கறிஞர் முரளி மற்றும் சிவகுருநாதன் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் பிரிவு 77 ஏ மற்றும் பிரிவு 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை அரசு கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வந்தது. அதில், போலியான மற்றும் தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அதை விசாரித்து குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் பத்திரங்களை செல்லாது என அறிவிக்கலாம்.

இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அதில், நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவு உள்ளது. பத்திரம் போலியானது என முடிவு செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றங்கள் தான் விசாரணைக்கு பின் பத்திரம் போலியானதா? இல்லையா? என முடிவு செய்ய வேண்டும்.

மாவட்ட பதிவாளர் நீதிமன்றத்தை போல செயல்பட முடியாது. ஒட்டுமொத்த சொத்து பத்திரங்கள் மீதுதான நம்பகத் தன்மையை கேள்விக்குறி ஏற்படுத்தும். உண்மையான பத்திரம் என்று வங்கியில் வைத்து கூட பணம் பெற முடியாத நிலையை இந்த சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 77ஏ மற்றும் 77பி ஆகிய சட்ட பிரிவுகள் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. நீநிமன்றத்தின் இந்த தீர்ப்பு நில ஆக்கிரமிப்புகளை அதிகரிக்குமா? யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? சட்டம் வல்லுநர் தரும் விளக்கத்தை பார்க்கலாம்

வழக்கறிஞர் முரளி, சென்னை உயர்நீதிமன்றம்:

நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதை ஏற்க முடியாது. சட்டப்படிப்பை முடிக்காமல் விசாரணை செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்க முடியாது. போலி பத்திரப்பதிவுகள் அதிகரித்ததால் அதை தடுக்க அரசு சட்டம் கொண்டுவந்தது. அனைத்து பத்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து அரசே நேரடியாக ஆய்வு செய்ய முடியாது என்பதால் சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியது.

அரசின் முயற்சி சரியானது என்றாலும், அவசரகதியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு முன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்திருக்க வேண்டும். சட்டம் படிக்காத மாவட்ட பதிவாளருக்கு சிவில் நீதிபதிகளின் அதிகாரம் வழங்குவதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வரும் காலங்களில் சட்ட திருத்தம் கொண்டு வந்தால் உரிய ஆலோசனைக்கு பின் கொண்டுவந்தால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என தெரிவித்தார்.

சிவகுருநாதன், வீட்டு மனைகள் விற்பனையாளர்கள் சங்கம்: தமிழக அரசு உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். அதில், முன்னாள் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழு பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுக்கு பின் பத்திரங்களை அனுமதிக்கலாம். இதனால், போலி பத்திரங்களின் புழக்கத்தை தடுக்க முடியும். மேலும், போலி பத்திரங்கள் அதிகரிப்பால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய நிறுவனங்கள் இடங்களை வாங்கும்போது ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னரே வாங்குகின்றன. சிறிய நிறுவனங்கள் ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யாமல் நிலத்தை வாங்கிய பின்பு ஏமாற்றப்பட்டது தெரிகிறது. அதனால், போலி பத்திரங்களை தடுக்க குழு அமைப்பதே தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இனி பெருங்களத்தூரில் டிராபிக் கிடையாது.. மேம்பாலம் பணிகளின் தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.