ETV Bharat / state

"கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி" - முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு! - Ex Minister Kadambur Raju

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 1:36 PM IST

Ex Minister Kadambur Raju: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார் எனவும், ஆனால், எடப்பாடி பழனிசாமி இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக சொல்லிவிட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அண்ணாமலை
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: கோவில்பட்டி அடுத்த எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மீண்டும் பாஜவுடன் கூட்டணியா?: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் தான் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களைக் கூறி வருகிறார். இதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை.

போதை ஒழிப்பு உறுதிமொழி என்பது கேலிக்கூத்து: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீடு விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் வருவது இயற்கையான நிகழ்வுதான். இதில் அரசியல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளச்சாராய சாவு, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுகவினரே போதைப் பொருட்களை கடத்தும் நிலை இருக்கும்போது, போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்ததை கேலிக்கூத்தாகத் தான் மக்கள் பார்ப்பார்கள்.

2026-ல் நாதக, தவெகவுடன் அதிமுக கூட்டணியா?: அரசியலில் எந்த நிகழ்வு வேண்டுமானாலும் வரும். நிச்சயமாக அவர்கள் யாரும் திமுக ஆட்சியை விரும்பவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இது இந்தியா கூட்டணியோ அல்லது திமுக வெற்றியோ கிடையாது. தமிழக வாக்காளர்கள், தமிழக மக்கள் பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர்.

மேலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழர் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்பதால்தான் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில், தமிழ்நாட்டை பாஜக புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது.

திமுக VS அதிமுக: 2026 தேர்தலைப் பொருத்தவரை அதிமுகவா? - திமுகவா? எடப்பாடி பழனிசாமியா? - மு.க.ஸ்டாலினா? என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். நல்லாட்சி நாயகனாக இருந்த எடப்பாடி பழனிசாமியை தான் மக்கள் ஆதரிப்பார்கள். அதிமுக தனித்து நின்றாலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருந்தனர். சட்டமன்ற தேர்தல் வரும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுகவுடன் சேர வாய்ப்புள்ளது" என்று கடம்பூர் ராஜு பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை அரசு அடக்குமுறை மூலமாக நடவடிக்கை எடுக்கிறது. குறிப்பாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது ஊர் ஊராகப் பாடல் பாடிய கோவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசை ஆதரித்துத் தான் செய்தி வெளியிட வேண்டும், எதிர்த்து வெளியிடக் கூடாது என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

மறைந்த தலைவர்கள் பற்றி அமைச்சர் த.மோ.அன்பரசன் தவறாகப் பேசுவது அழகல்ல. அநாகரிகமாக உள்ளவர்களை திமுக அமைச்சராக்கியுள்ளது. இதை கண்டிக்காமல் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமும் அப்படித்தான் உள்ளது" என்று கடம்ரபூர் ராஜு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'முதல்வர் மருந்தகம்' முதல் படை வீரர்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வரை.. சுதந்திர தின விழாவில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.