ETV Bharat / state

“இலையும் தண்ணீரும் எப்போதும் ஒட்டாது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! - Jayakumar about Annamalai - JAYAKUMAR ABOUT ANNAMALAI

AIADMK ex minister Jayakumar: தமிழகத்தில் பாஜக, ஆர்சிபி கிரிக்கெட் அணியை போல தோற்றுக் கொண்டே தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu, Annamalai X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 7:30 PM IST

Updated : Jun 7, 2024, 10:59 PM IST

சென்னை: சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உள்ளாரம்மன் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "தேர்தல் என்பது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்யப் போவது அதிமுக தான். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மாறிமாறி வருவது வழக்கம்.

அண்ணாமலை ஒரு 'புள்ளி ராஜா': அண்ணாமலையைப் பொறுத்தவரை அவர் ஒரு 'புள்ளி ராஜா' ஆகிவிட்டார். எதற்கெடுத்தாலும் புள்ளி விவரத்தோடு பேசுவார். புள்ளி விவரங்களை திரட்டும் அதிகாரியாக இருந்தாரே தவிர, ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கவில்லை. 2014 தேர்தலில் இதே கூட்டணி தான் இருந்தது.

அந்த நேரத்தில் பாஜக தமிழகத்தில் வாங்கிய ஓட்டை விட, தற்போது குறைவான ஓட்டு வாங்கியுள்ளது. இதைப் பற்றி அண்ணாமலை ஏன் பேசவில்லை? இது என்ன அவர் சொல்ல மறந்த கதையா? பாஜக 10 ஆண்டுகளில் என்ன வளர்ச்சியைக் கண்டுள்ளது? தருமபுரி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

பாஜக ஆர்சிபி, அதிமுக சிஎஸ்கே: இவர்களை சுருக்கமாகச் சொல்வதென்றால், ஐபிஎல் போட்டியில் வரும் ஆர்சிபி (RCB) அணியைப் போன்றவர்கள். தமிழகத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதிமுக சிஎஸ்கே (CSK) அணியைப் போன்றது. பல வெற்றிகளை குவித்துள்ளோம், இன்னும் வெற்றிகளை குவிக்க உள்ளோம்" என கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சுகாதார பிரச்னை, நதிநீர் பிரச்னை போன்றவற்றை பேசாமல், மத இனவாதத்தை மட்டுமே பேசுகிறது பாஜக. தற்போதைய ஆட்சியைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவர் மட்டும் தான் கிங் மேக்கர். புள்ளி விவரங்களைக் கொண்டு படம் காட்டும் வேலை எல்லாம் இங்கு வேண்டாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் திராவிட இயக்கங்கள் தான், பாஜகவிற்கு இடமில்லை" எனக் கூறினார்.

திராவிட மண்ணில் பாஜகவிற்கு இடம் கிடையாது: அதன் பின்னர், தமிழகத்தில் பல இடங்களில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அரசியல் களத்தில் இதையெல்லாம் கணக்கில் கொள்ள முடியாது. அரசியல் சூழ்நிலை மாறும், ஆனால் இதை வைத்துக்கொண்டு பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது.

இது திராவிட மண், தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைத்த வாக்கு தற்காலிக வாக்குதான். அரசியல் மாறுதலுக்காக கூட்டணி வைத்தோம். இனி அரசியல் கூட்டணி கிடையாது. அனுமானத்தின் அடிப்படையில் வேலுமணி பதில் கூறியிருக்கிறார். இனிமேல் இலையும், தண்ணீரும் ஒட்டாது.

ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றி பாஜகவை கெட் அவுட் என நாங்கள் தான் வெளியேற்றி விட்டோம். பாஜகவுடன் கூட்டணி எதிர்காலத்திலும் கிடையாது. அண்ணாமலை இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது. குறிப்பாக, தமிழகத்தில் பாஜகவால் எந்த நல்லதும் நடக்கப்போவது கிடையாது" எனக் கூறினார்.

பின்னர், அதிமுக அணிகள் மீண்டும் இணைய வேண்டும் என சசிகலா மற்றும் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து பேசும்போது, "ஏற்கனவே துணை பொதுச் செயலாளர் சொன்னது போல அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இனி எந்த காலத்திலும் இணைப்பு என்பது நடக்காது. கட்சி எழுச்சியாக உள்ளது, இந்த எழுச்சியோடு 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்" எனத் தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அண்ணாமலையின் கருத்து குறித்து பேசும் போது, அண்ணாமலை ஒரு இளவல் காத்த கிளி, 2026-ல் ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகிறார். அவர்களால், அயோத்தி ராமர் கோயில் கட்டிய தொகுதியிலேயே வெற்றி பெற முடியவில்லை. பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் சரிந்த அதிமுக கோட்டை.. இதுதான் காரணமா?

Last Updated : Jun 7, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.