ETV Bharat / state

“தெய்வ விக்கிரகங்களை காட்சிப்பொருளாக வைத்து கேவலப்படுத்த வேண்டாம்” - பொன் மாணிக்கவேல் ஆவேசம்! - PON MANICKAVEL SLAMS DMK - PON MANICKAVEL SLAMS DMK

PON MANICKAVEL SLAMS DMK: தமிழக அரசிடம் சிலைகளை மீட்கக் கோரி மனு அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தெய்வ விக்கிரகங்களை மியூசியத்தில் காட்சிப் பொருளாக வைத்து அறநிலையத்துறை கேவலப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

பொன் மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 9:11 PM IST

திருச்சி: கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தோடு, திருச்சி மாநகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மிக விழா, திருச்சி திருவானைக்காவல் விபூதி பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.

பொன் மாணிக்கவேல் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த விழாவில் கோயில் சொத்துக்கள் பாதுகாப்பது குறித்த தலைப்பில் ஓய்வுபெற்ற காவல்துறை முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அறநிலையத்துறை நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். பறிபோன சிலைகளை மீட்காமல் சப்பைகட்டு கட்டுவதுபோல ஆறாயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தோம் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழகத்தில் தனது நிர்வாகத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி, தற்போது தொல்லியல் துறையில் உள்ள உதயச்சந்திரன் தற்போதும் தனது திறமையைக் காட்ட வேண்டும். அந்த காலத்தில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வழிபாட்டுக்காகவே உற்சவர் வீதி உலா நடைபெற்றது. அந்த விக்கிரகங்கள் அனைத்தும் முகலாயர்கள் படையெடுப்பின் போது பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

லண்டனில் இருக்கும் விக்ரகங்கள்: லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தெய்வ விக்கிரகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. 1,414 விக்கிரகங்கள் சுபாஷ் கபூரால் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட கட்சியினரை குறிப்பிடுவதால் நான் ஒரு கட்சிக்கு மட்டும் சார்ந்தவன் அல்ல.

3‌ லட்சத்தது 50 ஆயிரம் தெய்வ விக்கிரகங்களை பதிவு செய்யுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதற்கு எல்லாம் நீதிமன்றம் மட்டும்தான் தீர்வா, அப்படி என்றால் அரசு எதற்கு?. மியூசியத்தில் உள்ள சுவாமி விக்கிரகங்களை கோயிலில் வைக்கவேண்டும். தெய்வ விக்கிரகங்களை காட்சிப்பொருளாக வைத்து அறநிலையத்துறை கேவலப்படுத்த வேண்டாம்.

நேற்றைய தினம் போலீஸ் பட்ஜெட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை கேட்பதற்கு அவமானமாக உள்ளது. இதை எதிரில் உள்ளவர்கள் கேட்டு அமைதியாக இருப்பது என்பது வெட்கத்திற்கு உரியது. கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களை பிரேத அறையில் வைத்து அவர்களுக்கு தலா 10 லட்சம் கொடுக்கிறது இந்த அரசு. தமிழக அரசிடம் சிலைகளை மீட்கக் கோரி மனு அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் பல கோயில்கள் சிதிலமடைந்து உள்ளது. அதனை சீர் செய்ய வேண்டும். இது ஸ்டாலின் பணமோ, கருணாநிதி பணமோ இல்லை. தனியார் பலர் கொடுத்த பணம் மற்றும் கோயில் வளர்ச்சிக்கு மற்றும் புணரமைப்புக்கு என பல கோடி உள்ளது. கோடிக்கணக்கான பணம் கையிருப்பில் இருந்தாலும் அதனைக் கொண்டு சிதிலமடைந்த ஆலயங்களை சீரமைக்க அரசு முன் வராததால் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றோம்.

கோயில்கள் அழிப்பு: நீதிமன்றத்தில் இதுவரையிலும் வழக்கு கொடுத்தும் 150 ஆர்டர்கள் வந்து ஒன்னும் பிரயோஜனம் இல்லை. அரசு இதுவரையிலும் செயல்படுத்தவில்லை. மாறாக, அறநிலையத்துறையை ஆட்டிப் படைக்கும் கமிஷ்னர் சர்வாதிகாரராக உள்ளார். இதுவரையிலும் 34 ஆயிரத்து 119 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளது.

2012-ல் நாடு முழுவதும் இருந்து 2,622 தெய்வ விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து போராடி சிலைகளை மீட்டு வரவேண்டிய தமிழக முதலமைச்சர் தற்போது வரை மௌனம் சாதித்து வருகிறார்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக்கொள்கை அறிக்கை; முதலமைச்சரிடம் நாளை சமர்ப்பிப்பு! - TN NEW EDUCATION POLICY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.