ETV Bharat / state

"கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்தோரின் ஆன்மா முதல்வரை சும்மா விடாது" - ஜெயக்குமார் காட்டம்! - AIADMK protest against DMK - AIADMK PROTEST AGAINST DMK

AIADMK protest against DMK: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால் தான் உண்மைகள் வெளிவரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்ட களத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆர்ப்பாட்ட களத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 11:01 PM IST

சென்னை: கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறியதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், டி. நகர் சத்யா உள்ளிட்ட அதிமுகவின் பலர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 150க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக பலர் கண் பார்வை இழந்துள்ளனர். கடந்த முறை கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்ட பொழுது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என முதலமைச்சர் வாய்சவடால் விட்டார்.

மருத்துவத்துறையின் அலட்சியத்தால் 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்பதை சுட்டிக்காட்டிய பிறகு தான் மும்பைக்கு சென்று மருந்துகளை வாங்கி வந்துள்ளனர்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில் திமுகவிற்கு மடியில் கனமில்லை என்றால் இதை சிபிஐக்கு மாற்றலாமே. சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் ஆளும் கட்சியினர் பலர் மாட்டுவார்கள். ஒரு நபர் ஆணையம் வெறும் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்னைகளை சட்டப்பேரவையில் தான் விவாதிக்க முடியும். இத்தனை பேர் உயிரிழந்ததுள்ள நிலையில், அதைப் பற்றி விவாதிக்க சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் குரவளையை பிடிக்கும் வகையில் தான் சட்டப்பேரவை உள்ளது. அதேபோல், ஆர்ப்பாட்டம் நடத்துவதிலும் காவல்துறையினர் அனுமதி மறுக்கிறார்கள்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரித்தால் தான் பல உண்மைகள் வெளிவரும். சிபிஐ விசாரிக்க கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம், நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறினார். பின்னர், மருந்து இல்லை என பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "அமைச்சர் இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா. மரணமடைந்தவர்களின் ஆவிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சும்மா விடாது. 2026ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்து விடுவார்கள்" என பதிலளித்தார்.

இதையும் படிங்க: "நாங்கள் சுட்டிக்காட்டிய போதே விழித்திருந்தால் இப்படி நடந்திருக்காது" - எஸ்.பி.வேலுமணி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.