ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த அங்கண்ணகவுண்டர்புதூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை வழியாக கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சோதனைச்சாவடிகளில் தொடர் ஆய்வில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அங்கண்ணகவுண்டர்புதூர் பகுதியில் போலீசார் அவ்வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 1.30 கிலோ கஞ்சா மற்றும் 6 பிசின் போதை சாக்லெட் பறிமுதல் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் போதை சாக்லெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: ஐடி ஊழியர்களே டார்கெட்.. சென்னையில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது!
விசாரணையில் அந்த பைக்கை ஓட்டி வந்தவர் அங்கண்ணகவுண்டர்புதூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (24) என தெரிவந்துள்ளது. இவர் பிஇ என்ஜினியரிங் பட்டாதரி வேலை தேடிவந்துள்ளார் ஆனால் வேலை கிடைக்காத காரணத்தால் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்றது தெரியவந்ததுள்ளது.
மேலும் பெங்களுருரில் இருந்து கஞ்சாவை விநியோகிக்க முயன்ற இதில் தொடர்புரை நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்குமாரிடமிருந்து போதை சாக்லெட், கஞ்சா மற்றும் ஐ போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஒரு கிராம் போதை சாக்லெட் ரூ.2500 வரை விற்கப்படுகிறது எனவும் 10 பேருக்கு சாக்லெட் விற்றால் ஒரு பாக்கெட் இலவசம் என கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த கும்பல் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்