ETV Bharat / state

"டிரக்ஸ்-ம் வேண்டாம், திமுகவும் வேண்டாம்" எக்ஸ் வலைத்தள பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.. - Say No to Drugs and DMK

Say No To Drugs and DMK: தமிழகம் திமுக ஆட்சியில் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளது எனவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பாக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளது - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
EPS has put slogan Say No To Drugs and DMK on home page of his X website
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 4:16 PM IST

Updated : Mar 9, 2024, 5:50 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வருகின்ற மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது "X" வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No to Drugs & DMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது "X" வலைத்தளத்தில், "மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கட்சியின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.

கட்சியின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய “X” தளத்தின் முகப்புப் பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுக அரசின் போராட்டம் தொடரும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "நடிகர் அஜித்குமார் நலமுடன் வீடு திரும்பினார்" - அடுத்த வாரம் ஷூட்டிங்கிற்கு வெளிநாடு செல்வதாக சுரேஷ் சந்திரா தகவல்!

Last Updated : Mar 9, 2024, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.