சென்னை: 2024 -25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று (ஜுலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு Sify technologies நிறுவனத்தின் மூத்த vice chairman கணேஷ் சங்கரராமன், CII chennai நிறுவனத்தின் Vice chairman அஜித் சோர்டியா, ராஜேஷ் சந்திரமௌலி President ஸ்ரீராம் கேப்பிட்டல் ஆகியோர் சிறப்பு பேட்டி அளித்தனர்.
மத்திய பட்ஜெட் குறித்து தொழிலதிபர் கணேஷ் சங்கரராமன் பேசுகையில், “இந்த பட்ஜெட்டில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசுக்கு அதிக பெரும்பான்மை இல்லாத நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கை எவ்வாறு இருக்கப் போகிறது என்றும், கடந்த நிதி நிலையில் இருந்த நிதி நிலை திட்டங்கள் தொடர்ச்சியாக இருக்குமா என்று நாங்களும் யோசனையில் தான் இருந்தோம். ஆனால், இது கடந்த நிதிநிலை அறிக்கையில் இருந்து தொடர்ச்சியாகவே உள்ளது எனலாம். இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால், அனைத்து துறைகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் என்று அனைத்து முக்கியமான விஷயங்களையும் இதில் இணைத்துள்ளது. மற்றொன்று MSME சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சிறு, குறு தொழில்களின் முன்னேற்றம் தான் இந்திய பொருளாதாரத்தை வருங்காலத்தில் உயர்த்தும். இந்த MSME திட்ட தொழில் முனைவோருக்கும், வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த நிதிநிலைத் திட்டம் அமைந்துள்ளது" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய CII Vice chairman அஜித் சோர்டியா, "முதல் முறையாக வேலை செய்யும் இளைஞர்களுக்கு இந்த அரசு சலுகைகளை வழங்கியுள்ளது. எனவே, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிக இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் நிர்பந்தம் ஏற்படும். எனவே, பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். கிட்டத்தட்ட 500 பெரிய நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பை அரசாங்கம் அமைத்து தந்துள்ளது.
EPFO என்று சொல்லக்கூடிய சேமிப்பில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடுவார்கள். அவர்களுக்கு வேலையே கிடைக்காது, இந்த பிரச்னை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இருந்து வருகிறது. இந்தத் திட்டம் வந்ததால் இனி இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை சீராக குறையும். மேலும், இளைஞர்களுக்கு வேலை செய்யும் பயிற்சி, அதாவது இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் (Internship) கொடுத்து வேலையை கற்றுக் கொடுங்கள், மேலும் அவர்களின் திறன்களை மேம்படுத்துங்கள்.
இண்டெர்ன்ஷிப்பிற்கு தேவையான பணத்தை சிஎஸ்ஆர் நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அதில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு நல்ல சம்பளத்தில் அவர்கள் எளிதில் வேலைக்குச் செல்வார்கள். இந்த மாதிரியான திட்டங்களில் பலன்கள் நமக்கு தெரிவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படாது, வெறும் இரண்டு மாதங்களிலேயே இந்த திட்டத்தின் பலன்களை நாம் காணலாம்.
வேளாண்மையைப் பொறுத்தளவிற்கு இந்தியாவில் விதைகளை உருவாக்குவதில் அல்லது அதை பெருக்குவதில் இந்த திட்டம் அதிக நோக்கத்தைக் கொண்டுள்ளது. முக்கியமாக எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வது குறித்து இந்த அறிக்கையில் அடங்கியுள்ளது" என்று கூறினார்.
பின்னர் பேசிய Sriram capitals president ராஜேஷ் சந்திரமௌலி, "இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார காரணியாக இருப்பது எம்எஸ்எம்இ (MSME) தான். இந்த சிறுகுறு தொழிலுக்கு எப்போதும் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்த பட்ஜெட்டில் பிரச்னைகள் இருக்கக்கூடிய தொழிலை மையமாக வைத்து, அதை சரி செய்யும் நோக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, முத்ரா கடனை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தியுள்ளனர். ஒரு தொழில் நலிவடைந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தற்போது செய்கின்றனர். உலக அளவில் தொழிலின் தரத்தை நாம் முன்னேற்றுகிறோம் என்றால் அதற்கான செயல்பாடுகளும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக சீன அளவிலான தொழில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு திறன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2024; விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடம் அமைக்க நிதி ஒதுக்கீடு! - chennai to VIzag