சென்னை: வேளச்சேரி டிஎன்.எச்.பி காலனி 11 வது தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடியிருப்பு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த 27 வயது வயது பெண் ஒருவரை கைது செய்தனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது, அந்தப் பெண் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், வங்கதேசத்தை சேர்ந்த வேறொரு பெண் ஏற்கனவே இந்தியாவில் வேலை செய்து வருவதால், அவரிடம் வேலை வேலை கேட்டபோது, இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்து வரும்படி கூறியதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தானும் தனது உறவினர் பெண் இருவரும் இந்தியாவுக்குள் திரிபுரா மாநிலத்தின் வழியாக சட்ட விரோதமாக நுழைந்து அங்கு அந்த வேறொரு பெண்ணுக்கு (இந்தியாவில் வேலை பார்ப்பவர்) தெரிந்த நபருடன் சென்று அங்கிருந்து சென்னை வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல, போலி முகவரிகள் அடையாள அட்டையில் உருவாக்கி, சென்னையில் ஷாப்பிங் மாலில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடமிருந்து 40,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அழைத்து வந்து திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆபில், ஜோஷித் ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டு அந்த பெண் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அளித்த தேனி புதுமண தம்பதி!
இதையடுத்து வங்கதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களில் ஒருவரை ஆபில், ஜோஷித் இருவரும் சேர்ந்து அழைத்துச் சென்று விட்டதாகவும், ஒரு வாரமாக அவர் வேளச்சேரி பகுதியில் உள்ள அறைக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 என்கிற பெண் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் போலீசிடம் சிக்கிய பெண் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து வங்கதேசத்தை சேர்ந்த பெண் தங்கி இருந்த அறையில் இருந்த திரிபுரா பெண்ணையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தங்கி இருந்ததால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள ரூம்க்கி, ஆபில், ஜோஷித் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.