ETV Bharat / state

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை! - ED raid in chennai - ED RAID IN CHENNAI

ED raid in chennai: சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:50 PM IST

சென்னை: சென்னையில் இன்று காலை முதல் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஐந்து கார்களில் சென்று காலை முதல் அசோக் நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனியார் மென்பொருள் அலுவலர், ஆடிட்டர் இல்லம் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் வசித்து வரும் முபாரக் ஹுசைன் என்பவர் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் கன்சல்டிங் ஆடிட்டர் அலுவலகத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், நுங்கம்பாக்கம் குமாரப்பா சாலையில் வசித்து வரும் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் தர்ஷன் குமார் என்பவர் வீட்டிலும், தேனாம்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பிலும், மேலும் இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களா என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் இதில் ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குப் பிறகு, அரசியல் பின்புலம் ஏதாவது உள்ளதா அல்லது கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதா அல்லது சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா போன்ற விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்த தயாநிதி மாறன்.. காரணம் என்ன? - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.