ETV Bharat / state

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - KAKKA THOPPU BALAJI ENCOUNTER case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

KAKKA THOPPU BALAJI ENCOUNTER UPDATE: சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தாயார் கண்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை வியாசர்பாடி அருகே நேற்று (செப்.18) அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (45) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.

மேலும் காக்கா தோப்பு பாலாஜி மீது ஐந்து கொலை வழக்கு உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசார் பிடியிலிருந்து தப்பிஓட முயன்றபோது போலீசார் தற்காப்புக்காக காக்கா தோப்பு பாலாஜியை சுட்டதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடல் உடற்குறு ஆய்விற்காக நேற்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் என்கவுண்டர் செய்யப்பட்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ இப்ராஹிம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காக்கா தோப்பு பாலாஜியின் உடலை முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: "காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் நிகழ்ந்தது ஏன், எப்படி? - சென்னை மாநகர போலீஸ் விளக்கம்!

பின் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி கையெழுத்து வாங்கிய பின்பு காக்கா தோப்பு பாலாஜி உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்குறு ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட அவரது உடல் அவரது தாயார் கண்மணி இடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காக்கா தோப்பு பாலாஜி உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது சகோதரர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைத்த பின் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்று காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்த போது அவருடன் பிடிப்பட்ட அவரது நண்பர் சத்தியமூர்த்தி என்பவர் கஞ்சா வைத்திருந்ததற்காக எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.