ETV Bharat / state

டிபன் பாக்ஸ் கழுவுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்: வைரலாகும் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் அடிதடி வீடியோ.! - students clash between govt school

Students Clash Between in Govt School: மதுரையில் கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைவெளியில், டிபன் பாக்ஸ் கழுவும் போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பள்ளி முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளிக்குடி போர்டு புகைப்படம்
கள்ளிக்குடி போர்டு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 10:56 PM IST

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ளது இருபாலர் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கள்ளிக்குடி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் இப்பள்ளிக்கு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதிய உணவு இடைவேளையின் போது தண்ணீர் குழாயில், டிபன் பாக்ஸ் கழுவும் போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிவடைந்தவுடன், பள்ளி எதிரே அமைந்துள்ள காலியான இடத்தில் இரு வகுப்பு மாணவர்களும், இரு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு தகாத வார்த்தையால் திட்டி அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அக்குறிப்பிட்ட பள்ளியில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கள்ளிக்குடி காவல் துறையினர் பள்ளி இயங்கும் நேரம், முடிவடையும் நேரங்களில் இப்பகுதியில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர் நியமனம்; அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை! - K Balakrishnan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.