ETV Bharat / state

36 மணி நேர போராட்டம்.. பாலூர் காப்புக்காட்டில் விடப்பட்ட டஸ்கர் யானை! - Elephant in Jawadhu hills area - ELEPHANT IN JAWADHU HILLS AREA

Tirupathur Elephant: ஆம்பூர் அருகே சாலை மற்றும் தோப்புகளில் முகாமிட்டிருந்த காட்டு யானையை 36 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் போராடி காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.

Elephant
யானை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 10:28 AM IST

திருப்பத்தூர்: ஜவ்வாது மலைத்தொடரில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக டஸ்கர் என்னும் ஒற்றைக் கொம்புடைய காட்டுயானை வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில், டஸ்கர் யானை நேற்றைய முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் நள்ளிரவில், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடி வந்தது.

பின்னர், இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து, காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் உடையராஜபாளையம், ஜமீன், குளிதிகை, வெங்கிலி, கீழ்முருங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து யானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, யானை நிலப்பகுதியில் புகுந்ததால் இளைஞர்கள், திருப்பத்தூர் மாவட்ட உதவி வன அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர், ஒடுகத்தூர் வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஒன்றிணைந்து யானையை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வைப்பத்தற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, நேற்று விடியற்காலை யானை கீழ்முருங்கை பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால், அந்த யானை வனப்பகுதியிக்குள் செல்லாமல், கீழ்முருங்கை வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில் முகாமிட்டது.

இவ்வாறு யானை முகாமிட்ட மாந்தோப்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வேலூர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு நெடுநேரம் ஆகியும் ஒற்றை காட்டுயானையானது வனப்பகுதிக்குள் செல்லாமல், வாழைத்தோப்பு, மாந்தோப்பில் முகாமிட்டு மீண்டும் நேற்று நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வேலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து, பேர்ணாம்பட் வனத்துறையினர் ஒன்றிணைந்து மீண்டும் யானையை திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், 38 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை ஒற்றைக் கொம்பு காட்டு யானை பாலூர் பகுதியில் உள்ள ஜவ்வாது மலைத்தொடர் காப்புக்காட்டில் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதையும் படிங்க: அப்பறம் ராமசாமி எப்டி இருக்க.. தினமும் யானைக்கு ஹாய் சொல்லும் ஓட்டுநர்.. ஈரோட்டில் சுவாரஸ்யம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.