ETV Bharat / state

திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு! - Elephant died by electrocution

Elephant death in Dindigul: திண்டுக்கல் ஆத்தூர் மலைப்பகுதியில் உணவு தேடி ஊருக்குள் வந்த ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யானை புகைப்படம்
யானை புகைப்படம் (Credit ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 8:10 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் மற்றும் காட்டு மாடுகள் விவசாய நிலத்திற்கும், குடியிருப்பு பகுதிக்கும் வனத்தில் இருந்து வெளியே வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை பகுதியில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மின்சாரம் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதி வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதில், தோனிமலை குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் மின்சாரக் கம்பியில் யானையின் உடல் பட்டு, மின்சாரம் தாக்கி சுமார் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தோனிமலை பள்ளியைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாலை இப்பகுதியில் யானை போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதாக பார்த்து, கன்னிவாடி வனச்சர அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் வன அதிகாரிகள், தற்போது யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர். அதேபோல், யானை எதனால் இறந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்கள் உடல் பரிசோதனையும் செய்து வருகின்றனர்

இதையும் படிங்க: தேனியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் நான்கு பேர் கைது! - Theni Country Bomb Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.