சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைப்பதில் முன்னணி நிறுவனமான ஸ்மைல் எக்ஸ்இவி (Smile XEV) மற்றும் டிஜேடி ஹைக்கா (DJT Haika) நிறுவனத்தினரின் இணையதளம், பிரத்யேக செயலி மற்றும் புதிய சார்ஜிங் மையங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், ஒலி மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றைத் தாண்டி நமது மக்களையும், இயற்கையையும் பாதுகாக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் தேவை தற்போதைய சூழலில் அதிகம் இருக்கிறது.
மின் வாகன சார்ஜ் மையங்கள் அமைப்பதில் முன்னணி நிறுவனமான Smile XEV மற்றும் DJI HAIKA நிறுவனத்தினரின் இணையதளம், பிரத்யேக செயலி மற்றும் புதிய சார்ஜ் மையங்கள் ஆகியவற்றை தொடக்கி வைக்கும் விழாவில் மதிப்பிற்குரிய வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@DrKalanidhiV அவர்களும் நானும்… pic.twitter.com/LTD5ej6uV2
— Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) September 16, 2024
ஆகவே, மின் வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிப்பது மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உருவாகிறது. இது அனைத்து மனிதர்களுக்கும் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளைப் பெற வழிவகுக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது இந்த வாகனங்களுக்கான டிசி சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் மையங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜேடி ஹைக்கா நிறுவனம் இந்த சார்ஜர்களை முழுமையாக உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தயாரிப்பதற்கான உரிமம் வைத்திருக்கும் பிரத்யேக நிறுவனங்களில் ஒன்றாகும்.
இதையும் படிங்க: 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.. செப்.28ல் டாடாவின் ஜாக்குவார், லேண்ட்ரோவர் தொழிற்சாலைக்கு அடிக்கல்.. ராணிப்பேட்டை மக்களுக்கு ஜாக்பாட்!
மேலும் இந்த சார்ஜர்கள், AC அலகுகளில் ASI 3.3 Kw மற்றும் ASI 7.4 Kw என இரு வகை சார்ஜர்கள் தடையற்ற இணைப்பு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சார்ஜிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. DC அலகுகளில் MACE 60 Kw, MACE 120 Kw மற்றும் MACE 240 Kw என்ற மூன்று அலகுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, இவை அதிவேக சார்ஜிங் மற்றும் இரட்டை ccs2 இணைப்பு போன்ற அம்சங்களுடன் அதிக போக்குவரத்து உள்ள நகர்ப்புறங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் கலந்து கொண்டு டிசி சார்ஜர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். மேலும், டிஜேடி ஹைக்கா நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய், நிர்வாக இயக்குநர் மணிந்தர், ஸ்மைல் எக்ஸ்இவி இயக்குநர் ராஜா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைத்தனர்.