ETV Bharat / state

திருப்பத்தூரில் உரிய ஆவணமற்ற ரூ.2 லட்சம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! - Lok Sabha Election

Lok Sabha Election 2024: திருப்பத்தூர் மாவட்டம் செட்டியப்பனூர் பகுதியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 1,900 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Lok Sabha Election 2024
2024 நாடாளுமன்றத் தேர்தல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:33 PM IST

திருப்பத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன.

அந்த வகையில், நடத்தை விதிகள் காரணமாக மாநில அரசு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றால், பணத்தைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, செட்டியப்பனூர் பகுதியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயன் (41). இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், விஜயன் நேற்று (மார்ச் 16) இரவு அணைக்கட்டில் இருந்து முட்டை ஏற்றி வருவதற்காக ரூ.2 லட்சத்து 1,900 எடுத்துக்கொண்டு, காரில் நாமக்கல் சென்றுள்ளார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டியப்பனூர் பகுதியில், ஜெயசித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விஜயன் ஓட்டிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 1,900 ரூபாய் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயசித்ரா அந்த பணத்தைப் பறிமுதல் செய்தார். அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜ ராஜனிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: "விழுப்புரத்தில் மீண்டும் நான்தான் போட்டியிடுகிறேன்" - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.