ETV Bharat / state

பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர் தகுதி நீக்கம்; தேர்தல் முறைகேடுகளை c-VIGIL செயலி மூலம் புகார் அளிக்கலாம்.. தேர்தல் ஆணையர் அதிரடி! - 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு

Election commissioner Rajiv kumar: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்.24) செய்தியாளர்களைச் சந்தித்துத் தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தத் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

Election commissioner Rajiv kumar
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 8:42 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் குழு தமிழகம் வந்தனர். கடந்த 2நாட்களாக அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்.24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இரண்டு நாட்களாக அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் அமலாக்கத் துறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரச்சாரம் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு அனுமதிகள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்பிற்கு வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் படையைப் பாதுகாப்புக்கு வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்தனர். மேலும், தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தத் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக சி-விஜில் (c-VIGIL) செயலி மூலமாகப் புகார் அளிக்கலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த செயலி மூலமாக 5ஆயிரத்து 800 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. புகார் மீது 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். Voter help line and Suvidha செயலிகள் மூலமாகப் பொதுமக்கள் அவர்களின் வாக்குச்சாவடி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களை இணையதளம் மூலம் மற்றும் செயலி மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 145 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநிலங்களின் எல்லையில் 59 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பணப் பட்டுவாடா செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு(Enforcement Directorate) அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மது, பணம் மற்றும் இலவசப் பொருட்கள் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமலாக்கத் துறைகள் தங்களின் அறிக்கைகளை வாரத்திற்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் அனைவருக்கும் சமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பூத் ஸ்லிப் (Booth slip) தேர்தலுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு வங்கியில் இருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்கிற்குப் பணம் மாற்றப்படுவது போன்றவற்றை வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும்.

இன்று கூட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று போலியான செய்திகள் செய்திகள் அறிவிக்கப்பட்டது. போலியான செய்திகள் பரப்பவர்கள் மீது சட்டத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் கட்சிகள் வாக்குறுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் பத்திரம் மட்டுமல்ல, அனைத்திலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையாக இருக்க விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024 எப்போது? - போலியான செய்திப் பரவுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.