ETV Bharat / state

"மோடி கன்னியாகுமரி வருகை விதிமீறலா?” - ஆர்.எஸ்.பாரதி பதில்! - R S Bharathi - R S BHARATHI

R.S.Bharathi: பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவது விதிமீறலா, இல்லையா என தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலளார் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர். எஸ். பாரதி
ஆர். எஸ். பாரதி (Credits: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:43 PM IST

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புகைப்படக் கண்காட்சியை திறந்த வைத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டு, இறுதியாக திமுக நிர்வாகிகள் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படக் கண்காட்சியானது இன்று முதல் ஜூன் 3ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின் சிறப்பு புகைப்படங்கள்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின் சிறப்பு புகைப்படங்கள் (Credits: ETV Bharat Tamilnadu)

1934ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதி தனது சிறு வயது முதல் வாழ்நாளில் அரசியல் வாழ்வில் பயணித்த பல நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் முதல் கலர் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய இந்த கலைஞர் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஓராண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை திமுக கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் நலத்திட்ட உதவிகள், கண்தான முகாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச்செயலளார் ஆர்.எஸ்.பாரதி, "கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வருகிற ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் 4ஆம் தேதி வரை தமிழகத்திலும், மற்ற இடங்களிலும் அமலில் இருப்பதால் 3ஆம் தேதி விழாவினை பிரமாண்டமாக நடத்த இயலவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சித் தொண்டர்கள் தலைவர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார்.

கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றி கொடுத்த ஒப்பற்ற தலைவர் கருணாநிதி. இந்தியாவில் தொடர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடக்கூடிய கட்சி திமுக தான். இந்த பெருமையை தேடிக் கொடுத்த கருணாநிதிக்கு அன்றைய தினம் மகிழ்ச்சியோடு மரியாதை செலுத்த வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாக, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் புகைப்பட கண்காட்சி இன்று (மே 30) முதல் ஜூன் 3ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கும் படியான ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது.

இந்த புகைப்படக் கண்காட்சியை பார்க்கும் பொழுது கண்கலங்க வைக்கக்கூடிய பல நினைவுகள் தான் வருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை பணியாற்றிய முழு படங்களும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. இந்த கண்காட்சியை திமுக பொருளாளர் திறந்து வைத்தார்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவது குறித்தான கேள்விக்கு, "எங்களைப் பொறுத்தவரை அதைப் பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டது. இது விதிமீறலா, இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை. திமுகவின் கோரிக்கையும் அதுதான்" என்றார்.

இதையும் படிங்க: ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய திருவிழாவில் பட்டாசு விபத்து: 3 பேர் பலி.. 30 பேர் படுகாயம்! - Puri Jagannath Temple Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.