ETV Bharat / state

ராணுவ வீரர்களின் தபால் வாக்கு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! - postal vote guidelines - POSTAL VOTE GUIDELINES

Military Personnel Postal Vote: நாடாளுமன்ற தேர்தலில், ராணுவ வீரர்கள் மின்னணு வாக்குச்சீட்டு முறையில் தபால் ஓட்டுப்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

POSTAL VOTE GUIDELINES
POSTAL VOTE GUIDELINES
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 1:20 PM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தபால் வாக்குப்பதிவு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1.தபால் வாக்கு சீட்டு, அறிவிப்பு படிவம், வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கான கவர், மற்றும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும்.

2.இந்த ஆவணங்களை, ராணுவ முகாமின் யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓடிபி மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

3. பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த தபால் வாக்குகள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட ராணுவ வீரரிடம் அளிக்க வேண்டும்.

4.இது தொடர்பாக ஒரு பதிவேட்டை சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரி பராமரிக்க வேண்டும்.

5.சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் வாக்கு சீட்டில் தனது வாக்கை பதிவு செய்து அதற்கான ஆவணங்களுடன் விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

6.தபால் மூலம் அனுப்புவதற்கு எந்தவித ஸ்டாம்ப்பும் ஒட்ட தேவையில்லை. இதற்கான கட்டணம் தலைமை தேர்தல் அதிகாரி மூலம் செலுத்தப்படும். இதில் முறைகேடு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு வாக்குச்சீட்டுக்கும் 'கியு-ஆர் கோடு' (QR Code Sticker) ஸ்டிக்கர் இருக்கும்.

7.வாக்கு எண்ணிக்கையின் அந்த கியு-ஆர் கோட்டை ஸ்கேன் செய்த பிறகு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்புதான் என்ன வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் உள்ள அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தேர்தல் விதிமுறை எதிரொலி: ஈரோட்டில் ரூ.3.75 கோடி பறிமுதல் - ஈரோடு கலெக்டர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.