ETV Bharat / state

'மகனிடமிருந்து வீட்டை மீட்டுத் தருக' ஈரோடு கலெக்டரிடம் ஆம்புலன்சில் வந்து மனு அளித்த மூதாட்டி! - நடந்தது என்ன? - Old woman Complaint

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் தன்னை ஏமாற்றி சொத்துக்களை பறித்து கொண்டு மோசடி செய்ததாகவும், தனது மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் வழங்கவில்லை என தாய் புகார் அளித்துள்ளார்.

Erode District Collectorate
மகன் சொத்துக்களை பறித்து கொண்டு ஏமாற்றியதால் 9 ஆண்டுகளாக அவதிப்படும் தாய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 11:12 AM IST

மகன் சொத்துக்களை பறித்து கொண்டு ஏமாற்றியதால் 9 ஆண்டுகளாக அவதிப்படும் தாய்

ஈரோடு: சிவகிரி அருகே உள்ள அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சச்சிதானந்தம் - சிவகாமி தம்பதியினர். சச்சிதானந்தம் விவசாய கூலி வேலை செய்பவராகவும், அவரது மனைவி சிவகாமி சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தனர்.

இவர்களுக்கு சோமசுந்தரம் என்ற மகனும், கோமதி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சிவகாமி, சச்சிதானந்தம் தம்பதியினர் தாங்கள் சம்பாதித்த பணம் ஆகியவற்றை வைத்து பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பாகவே சிவகிரி அம்மன் கோயில் பகுதியில் சுமார் இரண்டு சென்ட் அளவில் நிலம் வாங்கி அதில் வீடுகட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.

சிவகாமி தனது கணவர் சச்சிதானந்தம் இறந்த பின்பும், அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். சிவகாமி தனது இரண்டு மகள்கள் கோமதி மற்றும் தேன்மொழிக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மூத்த மகன் சோமசுந்தரமும் திருமணம் செய்து அதே பகுதியில் வேறு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சோமசுந்தரம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தையின் பெயரில் உள்ள வீட்டின் இடத்தை தாயின் பெயருக்கு மாற்றுவதாக கூறி, தாயிடம் கையெழுத்து பெற்று தனது பெயருக்கு மாற்றம் செய்துதாக கூறப்படுகிறது. மேலும், தாயையும் அந்த வீட்டில் வசிக்க விடாமல் அருகிலுள்ள வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார்.

மேலும் தாய்க்கு மருத்துவ சிகிச்சைக்கு கூட உதவி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கான ஆள மூதாட்டி, இது தொடர்பாக நேரில் முறையிட்டும், காவல்துறையில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் சிவகாமி கடந்த நான்கு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்வதும் பின்பு சிகிச்சை பெற்று வீடு திரும்புவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவகாமி, தனது கணவரின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து மோசடி செய்த மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (ஜன.29) மனு அளித்துள்ளார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அவசர ஊர்தி மூலமாக தனது இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.

இம்மனு மீது மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பெற்ற மகனே தாயின் சொத்துக்களை மோசடி செய்ததுடன், தாயின் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் வழங்காமல் ஏமாற்றியதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தனது மகனால் நேர்ந்தவைகள் குறித்து மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க ஆம்புலன்ஸில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: இது யானை ரெய்டு.. வாகனங்களை வழிமறித்து உணவு தேடும் காட்டு யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.