ETV Bharat / state

விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை.. எடப்பாடி பழனிசாமி கருத்து! - Edappadi K Palaniswami

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 3:38 PM IST

Edappadi K.Palaniswami: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி, கடந்த ஜூலை 11ஆம் தேதி அன்று உயிரிழந்த நிலையில், இவரது மரணத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்குச் சென்று, ஜெகன்நாதன் ரெட்டியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் சரணடைந்துள்ளார். தற்போது சரண் அடைந்தவர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு என்கவுண்டர் நடந்திருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால்தான் அதிமுக அதில் போட்டியிடவில்லை. தற்போது பணபலம், அதிகார பலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது. காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், இன்றைக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

குறிப்பாக, தமிழக விவசாயிகளைப் பற்றியும் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை திமுக அரசு எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. ஆனால், அதிமுக இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கபினி அணையில் தற்பொழுது தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனை தேக்கி வைக்க முடியாமல் கர்நாடக அரசு அதனை தற்போது திறந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் துடிக்கத் துடிக்க வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி! - Armstrong murder video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.