ETV Bharat / state

கண்ணீரில் கள்ளக்குறிச்சி! 'முதலமைச்சரே ராஜினாமா செய்க..அரசையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துக' - ஈபிஎஸ் கடும் தாக்கு - Kallakurichi Illicit liquor tragedy

AIADMK on Illicit liquor tragedy in Kallakurichi death: தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 50 பேர் வரை பலியாகிய நிலையில், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலிறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி அரசையே சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 1:04 PM IST

Updated : Jun 21, 2024, 2:29 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேச ஆரம்பித்தபோது சபாநாயகர் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில், உதயகுமார் மீண்டும் அனுமதி கேட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, "நெஞ்சை பதற வைக்கின்ற சம்பவம், நாட்டையே உலுக்கி கொண்டிருக்கின்ற சம்பவம், மக்கள் தவித்து கொண்டிருக்கின்ற இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு கேட்டோம். ஆனால், சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

சட்டப்பேரவையில் பேச அனுமதி இல்லை என்றால், சட்டமன்ற உறுப்பினராக இருந்து எந்த ஒரு பயனும் இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எங்களது தலையாய கடமை. கள்ளச்சாராயம் மரணம் குறித்து பேசுவதற்கு எழுந்து அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.

சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை - ஈபிஎஸ்: எங்களை வழுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்; சட்டப்பேரவையில் நியாயம் கிடைக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயல்பட்டு இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 50 உயிர்களை இழந்திருக்கிறோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் அனுமதி கேட்டதற்கு கைது செய்யும் அளவிற்கு கொடுமை நடந்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை ஒழிப்பு குறித்து அடிக்கடி கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், ஏன் இப்படி நடக்கிறது? என்று தெரியவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் இருக்கும் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு சுமார் 200 மீ தொலைவில் மட்டுமே உள்ளது. தொடர்ந்து மூன்று வருடமாக கள்ளச்சாராயம் அந்த பகுதியில் விற்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்: முதலமைச்சர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை, போதிய மருத்துவர்கள் இல்லை, போதிய மருந்துகள் இல்லை. போதிய மருந்துகள் இல்லவே இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அனைத்து மருந்துகளும் இங்கே உள்ளது என்று பொய் சொல்கிறார்.

மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் ஏன்?: ஆரம்பத்தில் மாவட்ட ஆட்சியர் 3 பேர் இறந்ததற்கு வயிற்றுப்போக்கு, வயிறு வலி தான் காரணம் என்று ஒன்று பொய்யான பதிலை கூறினார். மாவட்ட ஆட்சியரை மட்டும் இடமாற்றம் செய்தது, இந்த கள்ளச்சாரய விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்று வெளிப்படையாக தெரிகிறது.

2023-ல் எச்சரித்த அதிமுக: ஏற்கனவே, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2023 கூட இதேபோல, ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது; ஆனால், அப்பொழுதும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு விடியா ஆட்சி அனைத்து தவறுகளுக்கும் துணை நிற்கிறது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை. சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம்.

அரசையே சிபிஐ விசாரிக்க வேண்டும்: உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை அதிமுக பொறுப்பேற்றுள்ளது. இரண்டு பேர் இறந்ததற்கே சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். 50 பேருக்கும் மேல் இறந்து கொண்டிருக்கின்றனர்.. ஏன் விசாரணை இன்னும் வைக்கவில்லை? இந்த அரசையே சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஜூன் 24-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஏற்கனவே இதேபோல, ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தது. மேலும் இவ்வாறு நடைபெறாமல் இருப்பதற்கு கவனமாக இருந்திருக்க வேண்டும். எனவே, இந்த அனைத்து சம்பவங்களையும் கருத்தில் கொண்டு ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்; ஹிட்லர் ஆட்சிபோல சர்வாதிகாரம் - சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஈபிஎஸ் குற்றச்சாட்டு - Kallakurichi Illicit liquor tragedy

Last Updated : Jun 21, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.