ETV Bharat / state

"எடப்பாடி ராஜினாமா செய்தால் நானும் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்" - ஆ.ராசா பதிலடி! - கோயம்புத்தூர்

Edappadi vs A Raja: எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கோவையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 10:58 PM IST

எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ ராசா பேச்சு

கோயம்புத்தூர்: இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 11ஆம் தேதி கோயம்புத்தூரில் பில்லூர் 3வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதன்படி, கோவை சரவணம்பட்டி பகுதியில் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் முத்துசாமி , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் இருந்தனர்.

ஆய்வினை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ அமைச்சர் உதயநிதி பில்லூர் 3 வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் வாரம் ஒரு முறை,10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது. பில்லூர் 3 திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு தினமும் தண்ணீர் கொடுக்க முடியும்.

கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம்” என்றார். தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில்,“கோவையில் மாஸ்டர் பிளான் தயாராக உள்ளது. விரைவில் வெளியிடப்படும். 30 வருடத்திற்கு தேவையான பணிகள் அதில் செய்து இருக்கின்றோம்” என தெரிவித்தார்.

பின்னர், நீலகிரி எம்.பி., ஆ.ராசா பேசுகையில்,“தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி வாழைப்பழ கதை மாதிரி பேசுகின்றனர். எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை.

எடப்பாடி கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர், முதலமைச்சர், கலைஞர், முதலமைச்சரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது. அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதலமைச்சர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள்.

இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொது செயலாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவின் துணை பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன்” என்றார். மேலும், எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறுவது குறித்த கேள்விக்கு, அது தனி கதை அதை பேசுவோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.சுவாமிநாதனை போல் பாரத ரத்னா விருதுக்கு அவர் தகுதியானவர்: மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சுட்டிக்காட்டும் மற்றொருவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.