ETV Bharat / state

"செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது" - முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு! - அமலாக்கத்துறை பதில் மனு

ED reply for Minister Senthil Balaji issue: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 6:45 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்கக்கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர்த்து, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும், போதுமான எந்த காரணமும் இல்லாததால் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது.

மேலும், பிரதான மோசடி குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோர முடியாது என்றும், எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், செந்தில் பாலாஜியின் மனு, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் திருப்பம்: சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.