ETV Bharat / state

சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை கோரும் அமலாக்கத்துறை! - C Vijayabaskar case

ADMK Ex Minister C.Vijaya Baskar Case: அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விவரங்களையும், குற்றப்பத்திரிகை நகலையும், ஆவண நகல்களையும் வழங்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ed-petition-in-pudukkottai-court-seeking-documents-related-to-aiadmk-ex-minister-vijayabaskar
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 7:39 PM IST

புதுக்கோட்டை: விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், கடந்த 2016 முதல் 2021 வரையில் ரூபாய் 35.79 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சி.விஜயபாஸ்கர், அவர் மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் இலுப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி ஆகிய 50க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் திடீர் சோதனை செய்தனர்.

இரண்டு நாட்களாக நடைபெற்ற அந்த சோதனையில், 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்குகள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கேட்ட 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் இருவரிடமும் மீண்டும் ஒப்படைப்பதற்குச சம்மதம் தெரிவித்ததை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மார்ச் 22) மீண்டும் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகாத நிலையில், வழக்கை வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், விஜயபாஸ்கர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விவரங்களையும், குற்றப்பத்திரிகை நகலையும், அதற்காக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ள ஆவண நகல்களையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில், புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே, லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடுத்த வழக்கின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதற்குரிய ஆவண நகல்களை அமலாக்கத்துறை கோரி மனு செய்திருப்பது இந்த வழக்கின் தீவிரத்தைக் காட்டியுள்ளது.

இதையும் படிங்க: “பாமக வேடந்தாங்கல் பறவையைப் போன்றது” - கூட்டணியை நம்பி அதிமுக இல்லை எனவும் ஈபிஎஸ் பேச்சு! - Edappadi Criticized Anbumani

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.