ETV Bharat / state

வெளிநாட்டிற்கு பணம் கைமாற்றப்பட்டதா? ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை! - Jaffer Sadiq case - JAFFER SADIQ CASE

ED questions Jaffer Sadiq: வெளிநாட்டுக்கு பணம் அனுப்பப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்து ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 5:33 PM IST

சென்னை: டெல்லியில் 2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். மேலும், இவருடன் மொத்தம் ஐந்து பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, 2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கிற்கு போதைப் பொருள் கடத்தல் வழக்கிலிருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்து இருப்பதால் அவரை டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈட்டிய வருவாயை யாருக்கெல்லாம் ஜாபர் சாதிக் மூலம் அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை வங்கி கணக்குகள் ஆய்வு மூலம் கைப்பற்றி, சென்னையில் நேற்று இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில், சென்னை ஆவடியில் ஜோசப் என்பவர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கொல்கத்தா அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோசப் என்பவருக்கு பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருப்பதும், அதில் பெரும்பாலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள முகவரியில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த வங்கி கணக்குகளில் 75 கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த 75 கோடி ரூபாய் பணமும் ஜாபர் சாதக்கிடமிருந்து கைமாற்றப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜோசப்பிடமிருந்து அந்த பணம் வெளிநாட்டிற்கு கைமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டில் யாருக்கு இந்த பணம் கைமாற்றப்பட்டது, அங்கு ஏதாவது தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈட்டிய வருவாயை வெவ்வேறு நபர்கள் மூலம் வெளிநாட்டிற்கு பணப் பரிவர்த்தனைகளை ஜாபர் சாதிக் செய்தாரா எனவும், ஜாபர் சாதிக்கிற்கும் ஜோசப்புக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், எந்தெந்த காலக்கட்டத்தில் ஜோசப் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நடத்தப்படும் விசாரணையில் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாமியாரை நடுரோட்டில் கொலை செய்த மருமகன்.. தஞ்சை அருகே பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.