ETV Bharat / state

அங்கித் திவாரி ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி! - ankit tiwari bail

Ankit Tiwari bail: அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது எனக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ankit tiwari bail
ankit tiwari bail
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 5:56 PM IST

மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அங்கீத் திவாரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அங்கித் திவாரி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும்.

ஜாமீன் வழங்கும் பட்சத்தில், நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம்” எனக்கூறி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி வழக்கில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

இதனையடுத்து, இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், “அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தயார் நிலையில் உள்ளது. எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி ஜாமீன் கோர முடியாது. எனவே, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது.

அதிகாரிகள் லஞ்சம் கையூட்டு பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது தேசத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களை, லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக உள்ளது. உச்ச நீதிமன்றம் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மனுதாரர் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது” எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்ரவிட்டார்.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.