ETV Bharat / state

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி! - ED frozen Ponmudi assets - ED FROZEN PONMUDI ASSETS

Ponmudi: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியது தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

Ponmudi
அமைச்சர் பொன்முடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:57 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில் ஜூலை 23ம் தேதி வரை 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் 28 பேர் அரசுத் தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துக்கள் என ரூ.14.21 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளிய வழக்கில், தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான கெளதம் சிகாமணி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளின் ரூ.14.21 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை சென்னை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முறைகேடு வழக்கு 29ஆம் தேதி ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.