சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையால் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போதைப் பொருட்கள் மூலமாக விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஜாபர் சாதிக் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. மேலும் ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத் துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: உதயநிதிக்கு எதிரான 'ஏஞ்சல்' பட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
இந்த வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அக்டோபர் 18ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் மற்றும் நடிகர் அமீர், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவமபர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்