ETV Bharat / state

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை இவையெல்லாம் இயங்காது!

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு, தலைமை செயலக கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு, தலைமை செயலக கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 5:01 PM IST

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மழை பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கொட்டும் மழைக்கு நடுவே ஆய்வு செய்தனர்.

பொது விடுமுறை: இதற்கு மத்தியில், நாளை (அக்.16) அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று மேற்கண்ட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாளை (அக்.16) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அத்துடன், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய துறைகள் இயங்கும்: இருப்பினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நாளை வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மிக கனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை: வானிலை மைய அறிவிப்பின்படி, நாளை (16.10.2024) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.