ETV Bharat / state

கனமழை எதிரொலி; சென்னை - டெல்லி விமான சேவைகள் ரத்து! - Chennai Airport - CHENNAI AIRPORT

DELHI FLIGHT CANCEL: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சென்னை-டெல்லி-சென்னை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

டெல்லி  சாலை போக்குவரத்து, விமான நிலையம்
டெல்லி சாலை போக்குவரத்து மற்றும் சென்னை விமான நிலையம் (CREDITS- ANI X OFFICIAL PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 4:46 PM IST

சென்னை: கடந்த சில மாதங்களாக தலைநகரான டெல்லியில் கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி சாலைகளில் செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நேற்று டெல்லி உள்நாட்டு விமான நிலையத்தில் இருக்கும் டெர்மினல் ஒன்றின் மேற்கூரை உடைந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் சிலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் மேற்க்கூரைகளை சீரமைக்கும் பணி நடந்து வந்ததால், நேற்று 12-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதில் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் இன்று (ஜூன் 29) மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 7 விமானங்கள், டெல்லியில் இருந்து சென்னை வரவிருந்த 9 விமானங்கள் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் ரத்து குறித்து விமான நிலையம் சார்பில் பயணிகளுக்கு முன்னதாக எந்த ஒரு தகவலையும் முறையாக அறிவிக்கவில்லை என பயணிகள் சார்பில் கூறப்படுகிறது. இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பேஸ்புக் பிரண்ட் ரிக்வஸ்ட்டில் 38 லட்சம் ருபாய் இழந்த பெண்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.