சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை (48). இவர், பிளாஸ்டிக் மோல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து திருவேற்காடு பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு, வழக்கம் போல் பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில், மது போதையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் புரண்டு படுத்தபோது, பேருந்து செல்லும் வழியில் தவறி விழுந்துள்ளார்.
அப்போது, பெரம்பூரில் இருந்து திருவேற்காடு பேருந்து நிலையத்தில் நுழைந்த தடம் எண் 29 இ அரசுப் பேருந்து, ஏழுமலை தலை மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மீதம் இருந்த மதுபானத்தை தனது இடுப்பில் வைத்திருந்த நிலையில், ஏழுமலையின் உடலுடன் சேர்ந்து மது பாட்டிலும் நசுங்கியது.
பின்னர், திருவேற்காடு போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக அண்ணா நகர், பெரிவரி சாலையைச் சேர்ந்த ஓட்டுநர் ஜம்புலிங்கம், (50) மற்றும் திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை, தாமரை குளத்தைச் சேர்ந்த நடத்துநர் சாமிநாதன் (39) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களின் பைக் பேரணி; ட்ரோனில் பறந்த தேசியக்கொடி- கோவையில் களைகட்டிய சுதந்திர தின விழா!