ETV Bharat / state

சித்திரை திருநாள் 2024: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! - Chithirai Thirunaal 2024 - CHITHIRAI THIRUNAAL 2024

Chithirai Thirunaal: சித்திரை முதல் நாளான நாளை (ஏப்.14) சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 3:33 PM IST

சென்னை: தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான நாளை (ஏப்.14) சித்திரை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து: சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும்.

அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.

சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும். சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளாலும், சதிகளாலும் நமக்கான சமூகநீதி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. 2022 சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும், நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன.

உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியும் உழைக்கும் மக்களுக்கான சமூகநீதி இன்னும் மலரவில்லை. நமக்கான சமூகநீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. சமுகநீதிக்கான சக்திகளை சித்திரை சுட்டெரிக்கும்; நமக்கான சமூகநீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ வாழ்த்து: இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது. மலரும் சித்திரையில், தளரும் பகை, வளரும் நகை என்று மகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

எட்டுத் திக்கும் அறிவு முரசு கொட்டி, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, இந்திய ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14.

மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை, தமிழரின் நித்திரைக்கு முடிவு கட்டி எட்டுத் திக்கும் சங்கொலிக்கட்டும் என தரணி வாழ் தமிழர்களுக்கெல்லாம் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து: சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்வில் வசந்தங்களைக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும். தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது.

சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அதை உண்மையாக்கும் வகையில் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தையும் சித்திரைத் திருநாள் வழங்கட்டும் என்று கூறி, உலகம் முழுவதும் சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு எனது உளப்பூர்மான வாழ்த்துக” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - Madurai Meenakshi Amman Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.