ETV Bharat / state

மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக மீண்டும் களமிறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி.. ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி - Manjolai Tea Estate - MANJOLAI TEA ESTATE

Manjolai Tea Estate: மாஞ்சோலை பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்ட நிர்வாகத்தால், செய்வதறியாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சட்டப் போராட்டத்தில் தீர்வு கிடைக்கும் என ஈடிவி பாரத் மூலம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தொழிலாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி
மாஞ்சோலை தொழிலாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 12:49 PM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலை தோட்டம். 1929ம் ஆண்டுக்கு முன்பு வரை நெடும் காடாக இருந்த இந்தப் பகுதி, சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (BBTC Ltd) என்ற தனியார் நிறுவனம் 1929ல் ஜமீனிடம் இருந்து மாஞ்சோலை வனப்பகுதியை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது.

டாக்டர் கிருஷ்ணசாமி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 8,000 ஏக்கர் வனப்பகுதியை பிபிடிசி(BBTC) நிர்வாகம் தேயிலை தோட்டமாக மாற்றியது. திருநெல்வேலி, மானூர், கல்லிடைக்குறிச்சி, நாகர்கோவில் உள்பட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு தங்கி எஸ்டேட்டில் பணிபுரிந்தனர். அவர்களின் வாரிசுகளும் சுமார் நான்கு தலைமுறைகளாக இங்கு பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2028ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைகிறது.

முன்னதாக ஜமீன் நில ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததால் குத்தகை காலம் முடிந்த பிறகு மேற்கண்ட தேயிலைத் தோட்ட பகுதியை காப்புக்காடாக (Reserved Forest) அறிவிக்க மத்திய வனத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு மாஞ்சோலை வனப்பகுதி காப்புக்காடாக நீதிமன்ற மூலம் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

எனவே, இன்னும் ஓரிரு ஆண்டில் குத்தகை முடிவதால் பிபிடிசி தனியார் நிறுவனம் தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழிலாளர்களுக்கு சமீபத்தில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. மேலும் ஆக.7-ஆம் தேதிக்குள் அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வற்புறுத்தலால் வெளியேறும் மக்கள்: ஆனால் பிபிடிசி நிறுவனம் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் மிகவும் குறைவான பண பலன்களை கொடுத்திருப்பதால் அதை வைத்து எங்களால் வாழ முடியாது, இங்கிருந்து கீழே செல்ல தங்களுக்கு விருப்பமில்லை. தொடர்ந்து இங்கேயே நாங்கள் வாழ்வதற்கு அரசு வழி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், 2028-ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலம் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தங்களை கட்டாயப்படுத்தி தனியார் நிறுவனம் கீழே செல்லும்படி வற்புறுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மாஞ்சோலை சென்று தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற சூழ்நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்க புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை சென்றபோது, அவருடன் வந்த கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மாஞ்சோலைக்கு சென்ற கிருஷ்ணசாமியை ஆரத்தி எடுத்து தொழிலாளர்கள் வரவேற்றனர். முதலில் அவர் மாஞ்சோலையில் வசிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து நாலுமுக்குவில் வைத்து ஊத்து காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேயிலைத் தொட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் தொழிலாளர்கள்: அப்போது பேசிய தொழிலாளர்கள் பிபிடிசி நிறுவனம் தங்களை ஏமாற்றி விருப்ப ஓய்வில் கையெழுத்து வாங்கி விட்டது. எங்களை ஒன்று சேர விடாமல் பிரித்து சூழ்ச்சி செய்து விட்டது. எங்களுக்கு கீழே வாழ்வாதாரம் கிடையாது. எனவே ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். அல்லது எங்களுக்கு இங்கே விவசாயம் செய்ய ஐந்து ஏக்கர் நிலம் தர வேண்டும் அல்லது தமிழக அரசு தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும், சமீபத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்ற பெண் தொழிலாளர்களை பார்த்து 'நீங்கள் என்ன ரவுடிகளா, உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை' என்று ஆட்சியர் கூறியதாக தொழிலாளர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை விவகாரத்தில் ஏன் தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. அதிகாரிகள் ஏன் பிபிடிசி நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? எனவே ஏதோ ஒரு உள்நோக்கம் இதில் இருப்பதாகவே கருதுகிறோம்.

நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுச்சி உண்டாகும். இங்கு வசிக்கும் மக்கள் எந்தவித தொலைதொடர்பும் இல்லாமல் தனித்து விடப்பட்டு இங்கு வசிக்கின்றனர். தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிவது மட்டும் தான் அவர்களின் வாழ்வாதாரம். எனவே திடீரென அவர்களை வெளியேற்றுவதால் அவர்களை மனநிலை பாதிக்கப்படும்.

சட்டப்படி தீர்வு காண்போம்: இது போன்ற மனித மீறல்கள் இருக்க முடியாது. பிபிடிசி நிறுவனத்திற்கு குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது. பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்டத்தை மூட முடிவு செய்துவிட்டது. அப்படி என்றால் அரசு இதை ஏற்று நடத்த உடனடியாக முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் பல்வேறு சட்ட முன்னெடுப்புகளை எடுக்கிறோம். அதில் தீர்வு கொண்டு வந்து விடுவோம் என நினைக்கிறேன். சட்டத்தின் மூலமாகவே தீர்வு வரும் போராட்டம் தேவைப்படும்போது எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருப்போம்" என்று கூறினார்.

"எத்தனை தலைவர்கள் இங்கு வந்தாலும், கிருஷ்ணசாமி இங்கு வந்தது எங்களுக்கு நிம்மதியை கொடுக்கிறது. எங்கள் உயிர் உள்ள வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்" என மாஞ்சோலை தொழிலாளி ரோஸ்மேரி தனது மனநிலைமையை ஈடிவி பாரத்திடம் வெளிப்படுத்தியுள்ளார்.

மாஞ்சோலையின் சோக வரலாறு: பொதுவாக மாஞ்சோலை என்றாலே கிருஷ்ணசாமி நினைவுக்கு வருவார். காரணம் 1998, 1989 காலக்கட்டத்தில் மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக கிருஷ்ணசாமி குரல் கொடுக்க தொடங்கினார். 1999 ஜூலை 23ல் ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தொழிலாளர்களை திரட்டி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார்.

அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசாரின் தடியடிக்கு பயந்து ஓடிய தொழிலாளர்கள் 17 பேர் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றில் குதித்த போது தண்ணீரில் அடித்து சொல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கடும் போராட்டத்திற்கு பிறகே அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இது போன்று சோக வரலாற்றை கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மாஞ்சோலை தொழிலாளர்கள் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் கிருஷ்ணசாமி அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஈழம்... காலியாகும் மாஞ்சோலை... கண்ணீரோடு விடைபெறும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்! - Manjolai Tea Estate

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.