ETV Bharat / state

"அரசின் கருணை வேண்டாம்; சட்டப்படியான நிவாரணமே தேவை" - மாஞ்சோலை விவகாரத்தில் கிருஷ்ணசாமி ஆதங்கம்! - MANJOLAI LABOUR ISSUE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 11:49 AM IST

Manjolai labour issue: மாஞ்சோலை தொழிலாளர்களுடன் தமிழக அரசு ஏன் பேசத் தயங்குகிறது? எனவும், தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் கருணை வேண்டாம், சட்டப்படியான நிவாரணம் கொடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,மாஞ்சோலை
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,மாஞ்சோலை (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 1929ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் மாஞ்சோலையை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தேயிலைத் தோட்டப் பணிகளை தவிர வேறு பணிகள் இந்த தொழிலாளர்களுக்குத் தெரியாது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

2006 வன உரிமை சட்டத்தின்படி தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வாழ உரிமை உள்ளது. நீதிமன்றம் கேட்ட தகவல் வேறு, தமிழக அரசு நீதிமன்றத்தில் கொடுத்த தகவல் வேறாக உள்ளது. காவல்துறையை வைத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு கொடுத்த நிவாரண அறிவிப்புகளில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. மாஞ்சோலை வழக்கில் மத்திய அரசின் பழங்குடியினத்துறையை இணைத்துள்ளோம்.

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கருணை காட்ட வேண்டாம், சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு யாரும் வேலை கொடுக்க தயாராக இல்லை. மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு ஏன் கருணை இல்லாமல் நடந்து கொள்கிறது எனத் தெரியவில்லை. டான் டீ நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மாஞ்சோலை தொழிலாளர்களே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்து அனுமதிக்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுடன் தமிழக அரசு ஏன் பேசத் தயங்குகிறது? மாஞ்சோலை தொழிலாளர்களின் கருத்துக்களை தமிழக அரசு கேட்க வேண்டும்.

ரூ.1,141 கோடி வரியினை பிபிடிசி நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது. அதனால் மாஞ்சோலையில் இருந்து பிபிடிசி நிறுவன பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்கக் கேட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யவில்லை. அனுமதி கொடுத்தால் நாளையே முதலமைச்சரை சந்திக்கத் தயாராக உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது?.. நீர்வளத்துறை அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.