ETV Bharat / state

"மருத்துவர் பாலாஜி உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?".. கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி விளக்கம்!

"பாதிக்கப்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் குற்றச்சாட்டாக சொல்லலாம். மருத்துவர் பாலாஜியே வெளியில் வந்து என்ன நடந்தது என்பதை பேசாத வரை, நாம் யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடாது" என கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி
கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

சென்னை: கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிலிருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை நேற்று (நவ.13) இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கினார். இந்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "மருத்துவர் பாலாஜி நல்ல நிலையில் உள்ளார். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான support system மும் இல்லாமல் நலமாக உள்ளார். தையல் போடப்பட்ட இடத்திலிருந்து உதிரப்போக்கு இல்லை.

கிண்டி அரசு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்க்க வந்த பொழுதுகூட நன்றாக பேசினார். 'என்னை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து எப்பொழுது மாற்றுவீர்கள்' என்று அவர் கேட்கும் அளவிற்கு நன்றாக உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் குற்றச்சாட்டாகச் சொல்லலாம்.

மருத்துவர் பாலாஜியே வெளியில் வந்து என்ன நடந்தது என்பதை பேசாத வரை, நாம் யூகம் அடிப்படையில் பேசக்கூடாது. அனைத்து மருத்துவமனைகளிலும் இயக்குநர்கள் அறை, டீன்கள் அறையுள்ளது. நோயாளிகளுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாகவே அவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு நோயாளிகளின் நிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எந்தவிதமான விளக்கமும் கவுன்சிலிங்கும் இல்லாமல் சிகிச்சை ஆரம்பிக்க மாட்டார்கள். புற்றுநோய் என்றால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல அட்டண்டருக்கும் மனதளவில் பாதிப்பு ஏற்படும். அதனால் எடுத்த உடனேயே ஹீமோதெரபி கொடுத்து சிகிச்சையை ஆரம்பிக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: மருத்துவருக்கு கத்திக்குத்து: என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - அமைச்சர் மா.சு தகவல்!

நோயாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? சிகிச்சை கொடுத்தால் என்ன பக்கவிளைவு ஏற்படும்? உள்ளிட்ட எல்லா நிலையையும் எடுத்துக்கூறி, பிறகுதான் சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். அதனை ஒத்துக்கொண்டுதான் நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

3 முறை 4 முறை ஹீமோதெரபி கொடுக்கும் வரை பேசாமல் தான் இருந்துள்ளார். தற்பொழுது இதுபோன்ற அசம்பாவிதம் நடந்த பிறகு அவரின் அம்மா பேசுவது எப்படி என்று தெரியவில்லை. இந்திய மருத்துவ சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டன போராட்டங்கள் அறிவித்துள்ளனர். அதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள்.

கிண்டி மருத்துவமனையில் உள்நோயாளிகள், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளைப் பார்க்க மருத்துவர்கள் இருக்கிறார்கள். கூடிய விரைவில் இது நல்ல முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று கமிஷனர் வருகை தந்திருந்தார். இங்கு ஒரு Out post தயார் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் குறைபாடுகள் இல்லாமல் எதுவும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். இந்த மருத்துவமனை ஆரம்பித்து ஒரு வருடம் தான் ஆகிறது. Functionயில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அது நிவர்த்தி செய்யப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த கண்டன போராட்டங்களில் நடைபெற இருக்கிறது.

நோயாளிகள் பாதிக்கப்பட வேண்டும் என்று எண்ணத்தில் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் சங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள் முடிவெடுக்க முடியாது. கிண்டி மருத்துவமனையில் முடிந்தவரை என்னென்ன வசதிகள் நோயாளிகளுக்கு செய்து கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் செய்து உள்ளோம்" என தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.